Breaking News
recent

அதிரை “மாட்டுக்கறி” விவகாரம்: பதில் சொன்னது தமுமுக!


கடந்த சில நாட்களாக அதிரையில் பரப்பரப்பாக பேசப்படும் செய்தி மாட்டுக்கறி வியாபாரத்துக்கு தடையா / தடையில்லையா? என்பது தான். இது தொடர்பாக அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் சகோதரர் S.H.அஸ்லம் அவர்கள் நமது சகோதர வலைத்தளங்களில் அவர்களின் நிலையை மக்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்தார், மேலும் அதிரை தமுமுக மீது சில குற்றச்சாட்டுகளையும் அதில் முன் வைத்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக, சமுதாய சேவை செய்கிறோம் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் அதிரை த.மு.மு.க. பற்றி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று பொதுமக்களின் வேண்டுகோளுடன் அதிரை தமுமுக நிர்வாகிகளை அனுகினோம். அதன் காணொளியினை இங்கே பதிந்துள்ளோம்.
சகோதரர் செய்யது பேட்டி


சகோதரர் அஹமது ஹாஜா பேட்டி


சகோதரர் சாகுல் ஹமீத் பேட்டி


பட்டுக்கோட்டை பஜக, இந்து முன்னனியினரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நகல்கள், மற்றும் அதிரை பேரூராட்சி கூட்ட அழைப்பு நகல்.






இந்த பேட்டி இயக்கங்கள் அல்லது தனிநபர் இவர்களில் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல, நம் சகோதரர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படவேண்டும், பகைமை போக்கவேண்டும். சம்பத்தவட்ட இருசாராரும் தங்கள் தரப்பில் உள்ள தவறுகளை உணர்ந்து, ஒருவருக்கொருவர் பகை மறந்து ஒற்றுமையுடன் அவர்களின் சமுதாய சேவையை செய்யவேண்டும் என்பதே அதிரை மக்கள் அனைவரின் ஆவல். இதனை நிறைவேற்றுவார்களா ? பொருத்திருந்து பார்ப்போம்.

Unknown

Unknown

11 கருத்துகள்:

  1. தமிழ் நாட்டில் நமக்கு நாமே என்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது

    அதிரைபட்டினத்தில் நமக்கு நாமே ஆப்பு அடிக்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது >>>>>>>

    ரொம்ப சரியா சொன்னீங்க சாகுல் ...ஆப்பு யாருடையது பெரியது போக போக தெரியும் ..பாவம் ..புண்ணியம்

    பார்க்காம அரசியல் செய்கிறார்கள் ..

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அதிரை நிருபரு ஊரு ரெண்டுபட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டண்டு சொல்லுவாங்க .அது போல இருக்கு இந்த பதிவு ...ஒரு ஊரு செய்தியும் ஒரு எழவும் போடாத இந்த அதிரை நிருபர் (கள்) (யதுக்குன்டா இந்த வெப் சைட்ட ஒரு பத்து பேறு பாத்துக்குட்டு அவன் அவன் மாத்தி மாத்தி கமெண்ட்ஸ் அடிச்சிகிறது.)பிரச்சநிகுரிய நியூஸ் ச போட்டு பேமஸ் ஆகுறதுக்கு. இப்போ கொஞ்சம் பிஸியா இருப்பானுவோ இந்த அதிரை நிருபர் (கள்) யதுக்குண்ட இந்த நோன்பு வருதுல கஞ்சி சேயுறது எப்படி சம்ச சேயுறது எப்படின்டு சொல்லிதருவானுவோ.ஆமா யாருக்குமே செய்ய தெரியாதுல ?போகங்கட முட்டாள் பசங்களா.

    பதிலளிநீக்கு
  4. தமுமுகவின் ஜவஹிருல்லாஹ் ,அஸ்லம் பாஷா ,தமீம் அன்சாரி ஆகியோர் தோர்க்க வேண்டும் என துஆ செய்கிறேன் என் கூரியாதக் கூறும் செய்து காக்கா அவர்களுக்கு ஒரு கேள்வி.

    தமுமுகவின் அரசியல் பிரிவான மமக சார்பில் இராமநாத புரத்தில் SDPI யின் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என நினைத்து களம் கண்ட மமகட்சி காவி சிந்தனையுள்ள கட்சியா??

    பதிலளிநீக்கு
  5. இந்தியாவில் இந்துத்துவ ஆட்சியில்கூட தடைவிதிக்க படாத மாட்டுக்கறி,முஸ்லிம்கள்
    அதிகமாக வசிக்கக்கூடிய அதிரையில் தடையா? ஏன் இப்படி ஒரு கேவளமான நிலை?...

    அல்லாஹ் ஹலால் ஆக்கிய ஒன்றை ஹராமாக்க உங்களுக்கு என்ன உரிமை? அல்லாஹுவை அஞ்சிகொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
  6. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

    சகோதரர்களே! இவ்வளவு குழப்பங்களுக்கு யார் காரணம் பொறுப்பற்று இச்செய்திகளை மக்களிடத்தில் பரப்பிய இணையதள நண்பர்கள் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சம்பவம் நடைபெற்றால் அச்சமபவத்தில் ஈடுபடுகிற அனைத்து தரப்பு தகவல்களையும் ஒருங்கே வெளியிட வேண்டும் என்கிற ஒரு அடிப்படையான கொள்கைகூட இல்லாதவர்கள் தான் இன்று நமதூர் இணையதளங்களை நடத்துகிறார்கள் என்பதற்கு இச்சமவத்தை வெளியிட்ட முறையிலிருந்து நமக்கு தெரிய வருகிறது.

    நாளை மறுமையில் அவரவர் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படவுள்ளோம் என்பதை மனதில் நிறுத்தி இனி செய்திகளை வெளியிட வேண்டும்மென கேட்டுக் கொள்கிறேன்.

    முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். ஹுஜுராத் 49:6

    அதுபோன்றே வெளியிடக்கூடிய செய்தியின் மூலம் மக்களுக்கு பயன் இருக்கிறதா? இல்லை பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடியதா? என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு செய்திகள் வெளியிடவும். அதோடு பிரச்சனைகள் இருக்கக்கூடிய செய்திகளாயிருந்தால், தாங்கள் வெளியிடக்கூடிய செய்திகள் மூலம் பிரச்சனைகள் இன்றி சமமாதானம் ஏற்படுத்தக்கூடிய செய்திகளாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோல்.

    முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். 49:9

    வஸ்ஸலாம்.

    அன்புடன்,
    B. ஜமாலுத்தீன்
    050-2855125

    Shafeeq said...


    அதிரை அன்புச்சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,
    தம்பி ஜமாலுதீன் கருத்தின் தொடர்ச்சியாக ஒரு சில கருத்துக்களை நமதூர் நலனில் அக்கறை உள்ள அனைவரின் பார்வைக்காக...............

    இனி வரும் காலங்களில் கிடைக்கும் செய்திகளை தன்னுடைய இணைய தளம் மக்கள் மத்தியில் விளம்பரம் பெற நினைத்து அனைத்தையும் செய்திகளாக போடாமல், இதன் உண்மை நிலவரத்தை அறிந்த பின் பதிந்தால் நல்லது.

    மேலும் அது உண்மை சம்பவமாக இருந்தாலும், பதியக்கூடிய செய்தி இரு முஸ்லிம் சகோதரர்கிடையில் இஸ்லாம் வலியுறுத்தி சொல்லக்கூடிய ஒற்றுமையையை கெடுக்கும் நோக்கத்தில் இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இச்செய்திகளை நம்மை விட மாற்று மத சகோதரர்கள், நம்மிடயே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய RSS போன்ற அமைப்பில் உள்ளவர்கள் தினமும் பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும்.
    இது போன்ற செய்திகளால் இணைய தளங்களை அதிகம் பார்க்ககூடிய வெளிநாட்டில் வாழும் அதிரை சகோதரர்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார்கள்.

    விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை, கேட்டுப்போபவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.

    வஸ்ஸலாம்
    கே.ஷபீக் அஹ்மத்.

    June 29, 2012 5:52 PM
    சகோ. ஜமாலுதீன், சகோ. ஷபீக் கூறியதுபோல மாட்டுக்கறி பற்றி அவதுார் செய்தியை முதலில் நிருபா் வளைப்புவில் Video பதிவுடன் பொய்யான Notice உடன் வெளியிட்டு இருந்தனா் மேலும் அதன் பொருப்பாளா்கள் ஊா்ரில் தான் இருந்துள்ளார்கள் இதனை வெளியிடுவதற்கு முன் பேருராட்சி தலைவரிடம் உண்மை செய்தியை கேட்டறிந்து வெளியிட்டிருந்தால் அனைத்து குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.

    Election நேரத்தில் கூட எந்த செய்தியையும் வேளியுாடமல் நடுநிலை வகித்த அதிரை நிருபா் திடீரென்டு இப்பதிவை வெளியிட்டிருப்பாது எல்லுருக்கும் சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது.

    வஸ்ஸலாம்
    Rosekhan.N

    பதிலளிநீக்கு
  7. மதியழகன் said...
    சேர்மன் அஸ்லம் அவர்களின் சில பிளஸ்....

    1. போராட்ட குணம்
    2. சாதிக்கும் மனப்பான்மை.
    3. எதையும் முன்னின்று செய்வது.
    4. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உந்துதல்.
    5. ஊழலற்ற நிர்வாகம்.

    சேர்மன் அஸ்லம் அவர்களின் சில மைனஸ்...

    1. பிரச்சினைகளை தானே முன்னின்று அணுகுவது.
    2. அனைவரையும் அரவணைக்காமல் நடப்பது.
    3. தேர்தலில் தனக்கெதிராக வேலை பார்த்ததால் நட்புராமல் தவிர்ப்பது.
    4. எதிரியை நண்பனாக்கும் மனோபக்குவம் இல்லாதது.

    குறிப்பு: அஸ்லம் அவர்கள் தனது மகளின் திருமண அழைப்பிதழை வீட்டிற்கு சென்று கொடுக்க முயன்றதை தவிர்த்த சகோதரரின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது. ஒரு மூமின் பண்பெல்ல இந்த செயல்.

    அதிரை தென்றல் (Irfan Cmp) said...


    என்ன நடந்து கொண்டிருகிறது ஊரில்

    ஏன் இந்த ஈகோ
    ஏன் இந்த பாகுபாடு
    ஏன் இந்த ஒற்றுமையின்மை
    ஏன் இந்த வறட்டு பிடிவாதம்
    ஏன் இந்த இயக்க/கட்சி வெரி
    ஏன் இந்த போட்டி/பொறாமை

    இந்த அணைத்து கேள்விகளுக்கும் விடை நம்மிடமே உள்ளது சிந்திப்பீர் சகோதரர்களே

    எப்பொழுதான் திருந்த போகிறோமோ அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்

    June 28, 2012 2:00 PM

    பதிலளிநீக்கு
  8. பட்டுக்கோட்டை இந்துதுவாக்கள் அதிரை விவகாரத்தில் தலையிட என்ன அதிகாரம் உள்ளது ?

    அப்படியே அவர்கள் புகார் அளித்தாலும் அதிரை பேரூர் நிர்வாகம் இதை எப்படி நடைமுறைபடுத்த முயல்வது ?

    உள்ளூர் விவகாரத்தில் தலையிட எந்த ம....க்கும் அனுமதியில்லை.

    பதிலளிநீக்கு
  9. //தமுமுகவின் அரசியல் பிரிவான மமக சார்பில் இராமநாத புரத்தில் ஸ்DPஈ யின் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என நினைத்து களம் கண்ட மமகட்சி காவி சிந்தனையுள்ள கட்சியா??//-அதிரை மஜ்லீஸ்


    மமக அதிமுக என்ற பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்து,அவர்களால் ஒதுக்கப்பட்ட இராமநாதபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.SDPI யின் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று அல்ல. சமுதாய அக்கரை இருந்தால் தனித்து போட்டியிட்ட SDPI தன்னுடன் ஒத்த கருத்துடைய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெறுவதற்காக போட்டியிலிருந்து விலகியிருக்கவேண்டும் என்பதை ச்கோதரர் உணரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. அஸ்ஸலாமு அலைக்கும்
    மேற்கண்ட பேட்டிகளில் பழைய செய்திகளைப்பற்றிய விளக்கங்களும் இரு தரப்பினரின் சொந்த பிரச்சினைகள் பற்றிய விளக்கங்களுமே வந்துள்ளது. மாட்டுக்கறி பிரச்சினை எதோ " தொட்டுக்கறி" போலத்தான் உபயோகப்படுத்துப்பட்டுள்ளது.
    சில இணையதளங்கள் நான் பங்களிப்பாளானாக உள்ள அதிரை எக்ஸ்பிரஸ் , இன்னும் இதுபோன்ற விவகாரங்களை தொடாத அதிரை நிருபர் உள்பட, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த பிரச்சினையிலிருந்து ஒதுங்கிக்கொண்டு உண்மை நிலையை மக்களுக்கு தெரியவிடாமால் செய்திருப்பது வருத்தமளிக்கும் விஷயம்...
    தற்போது, மட்டுக்கரியில் முக்கிய பிரச்சினையான "இரயிலில் அடிப்பட்ட பசு மாட்டை "அடிமாட்டு" விலைக்கு வாங்கி விற்பனை செய்த விவகாரத்தில் - அந்த மாட்டின் சொந்தக்காரின் வாக்கு மூலத்தின் வாயிலாக - சகோதரர் அசலம் நிரூபித்துள்ளார்...அதை வெளியிட்டு அதிரை போஸ்ட் இணையதளமாவது தனது நேர்மையை நிரூபிக்குமா?
    அந்த இணைப்பு : http://www.youtube.com/watch?v=J2X8ArIcekk

    பதிலளிநீக்கு
  11. அஸ்ஸலாமு அலைக்கும்,,,

    இதில் இந்து, முஸ்லீம் என்று பார்க்க வேண்டிதில்லை. சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி இருதரப்பினரும் நடந்து கொண்டால் அனைத்தும் நல்லபடி நடக்கும். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அனைவரும் சிந்தித்து செயல்பட்டு ஊரின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.